Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாளில் யுடியூபில் வெளியாகும் அவர் இயக்கிய ‘உன்னை போல் ஒருவன்’!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:34 IST)
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான ஒரு ஆளுமையாக இருந்தவர் ஜெயகாந்தன். தன்னுடைய சிறுகதைகளுக்காகவும், நாவல்களுக்காகவும் மிகப்பெரிய வாசகர் பரப்பைக் கொண்டிருந்த ஜெயகாந்தன், ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.

ஜெயகாந்தனைப் பற்றி இன்றைக்குள்ள இளைய தலைமுறைக்கு தெரியாத விஷயம், அவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதுதான், தன்னுடைய கதைகளையே யாருக்காக அழுதான் மற்றும் உன்னை போல் ஒருவன் என திரைப்படங்களாக எடுத்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் இதுவரை இணையத்தில் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மகள் தீபலஷ்மி தன்னுடைய யுடியூப் பக்கத்தில் ஜெயகாந்தன் இயக்கிய ‘உன்னை போல் ஒருவன்’ திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தீவிர சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நோலன் கன்னிகளின் ஆதரவால் ரி ரிலீஸில் கலக்கும் இண்டர்ஸ்டெல்லார்..!

2கே கிட்ஸ் vs 90ஸ் கிட்ஸ் மோதல்தான் கதையா? கோபி, சுதாகரின் ‘Oh God Beautiful’ படத்தின் டைட்டில் டீசர் வைரல்!

மறுபிறவி கதையைக் கையில் எடுக்கும் அட்லி… எடையைக் குறைக்கும் சல்மான் கான்!

விஜய்யின் ‘சச்சின்’ ரீரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தாணு அதிரடி அறிவிப்பு..!

ஜனநாயகன் படத்தோடு மோதுகிறதா சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’?

அடுத்த கட்டுரையில்
Show comments