Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசுகளின் கூட்டணியா… ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் பற்றி வெளியான தகவல்!

vinoth
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (08:03 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது படத்துக்கான நடிகர் நடிகைகள் தேடும் படலம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், ஏ ஆர் ரஹ்மானின் மகன் ஏ ஆர் ஆர் அமீன் முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களின் வாரிசுகள் எல்லாம் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்குக் கமல்ஹாசனுக்கு அழைப்பு!

வருகிறது பிச்சைக்காரன் மூன்றாம் பாகம்… அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

பழம்பெரும் நடிகர் ஜி சீனிவாசன் காலமானார்!

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments