Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பாட்டுதான்! கிடுகிடுவென எகிறிய Fan Base! தென்னிந்திய சினிமாவில் செம எண்ட்ரி கொடுத்த ஜான்வி கபூர்!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (09:56 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ஐந்துமொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இனிமையான மெலடி பாடலான ‘பத்தவைக்கும்’ என்ற பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. பாடலின் இடையே காட்டப்படும் விஷுவல்களில் ஜான்வி கபூரின் கிளாமர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த ஒரே பாடல் மூலமாகவே ஜான்வி கபூர் அடுத்தடுத்து தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகளை அள்ளிவிடுவார் என்று ரசிகர்கள் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments