Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் த்ரிஷாக்கு ஆதரவாக சிம்பு!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (18:03 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழ்  சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்புவும், ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக பத்திரிகையாளிடம் பதில் அளித்துள்ளார்.

 
திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பது குறித்த கேள்வியை கேட்டனர்.   இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பில் த்ரிஷா இருப்பது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
 
ஜல்லிக்கட்டுக்கும், த்ரிஷாக்கும் ஆதரவாக பேசிய சிம்பு, “த்ரிஷா தெருநாய்க்கெல்லாம் தன் வீட்டில் இடம் கொடுத்தவர்.  அவரின் அந்த நல்லகாரியம் பற்றி யாரும் பாராட்டுவது இல்லை. அப்படி இருக்கும்போது இது குறித்து மட்டும் எப்படி கேட்க  முடியும். பீட்டா ஜல்லிக்கட்டை எதிர்க்கும் என்று அவருக்கு எப்படி தெரியும். தெரிந்திருந்தால் த்ரிஷா அதற்கு ஆதரவு  தெரிவித்திருக்க மாட்டார் என கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்த தோனி… எங்கு தெரியுமா?

சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்கள்!

ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா… கலக்கல் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments