Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்ஜுனனின் காதலி - சிடியிலிருந்து வெள்ளித்திரைக்கு?

அர்ஜுனனின் காதலி - சிடியிலிருந்து வெள்ளித்திரைக்கு?
, திங்கள், 30 மார்ச் 2015 (12:21 IST)
ஜெய் அறிமுகமாகி வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்த நேரம், வாமனன் தவிர நான் நடிக்கும் மற்ற படங்கள் தேறாது என ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்தார். இது திரையுலகில் கொந்தளிப்பை உருவாக்கியது. ஜெய் சொன்ன அந்த மற்றப் படங்களில் ஒன்றான அர்ஜுனனின் காதலி இன்றுவரை வெளியாகாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. 
 

 
இந்தப் படத்தை சேரனின் சி2ஹெச்சில் வெளியிடுவது என்று முடிவு செய்து, அறிவிப்பையும் வெளியிட்டனர். இந்த நேரம், படத்தை திரையரங்கில் வெளியிட்டால் என்ன என்று தயாரிப்பாளர்களுக்கு தோன்றியுள்ளது.
 
தியேட்டருக்கு என்று எடுக்கிற படத்தை சிடியில் விற்பனை செய்வது யாருக்குதான் பிடிக்கும்? ஜெய்யின் வலியவனைத் தொடர்ந்து புகழ் படம் வெளிவருகிறது. இதற்கு இடையில் அர்ஜுனனின் காதலியை வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
படத்தில் ஜெய்யுடன் நடித்துள்ள பூர்ணாவுக்குதான் மார்க்கெட் இல்லை. ஆனால் தம்பி ராமையா, லட்சுமி ராமகிருஷ்ணன், மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் இன்னும் டாப்பில்தான் இருக்கிறார்கள். அதனால் படத்தை திரையரங்கிலேயே வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil