Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள சினிமாவைக் காப்பாற்றுங்கள்.. ஜெயிலர் இயக்குனர் திடீர் போராட்டம்!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:09 IST)
சக்கிர் மாடத்தில் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தயன் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள தமிழ்ப் படமான ஜெயிலர் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்துள்ளதால் கேரளாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு உள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் மட்டும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என மலையாள ஜெயிலர் படக்குழுவினரால் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இயக்குனர் சக்கீர் மடத்தில்  தங்கள் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை எனக் கூறி கேரளா பிலிம் சேம்பர்ஸ் முன்னர் “மலையாள சினிமாவைக் காப்பாற்றுங்கள்” என்ற பதாகையோடு போராட்டத்தில் ஈடுபட்டார். கேரளாவில் தமிழ் சினிமாக்களின் ஆதிக்கத்தால் மலையாள சினிமா மூச்சுமுட்டுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சௌந்தர்யா தயாரிப்பில் அசோக் செல்வன் நடித்த வெப் சீரிஸ் கைவிடப்பட்டதா?

இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தைக் கைவிட்டாரா விஷ்ணு விஷால்?

25 ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் இயக்கத்தில் நடிக்க இருந்த ‘காதல் ஒழிக’.. பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள்!

ஜியோ- ஹாட்ஸ்டார் இன்று முதல் இணைப்பு.. இனிமேல் ஐபிஎல் போட்டிகள் இலவசம் கிடையாது..!

அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’.. 5 நிமிட வீடியோவை வெளியிட்ட சிம்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments