400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஜெயிலர்!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரிசையாக தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது ஜெயிலர். பீஸ்ட் என்ற தோல்வி படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கிய படம் என்பதால் முதலில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய ரஜினி அலை வீசியது.

இந்நிலையில் இப்போது படம் ரிலீஸ் ஆகி 6 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் கேரியரில் 2.0 படத்துக்குப் பிறகு ஜெயிலர் திரைப்படமே அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 1ன் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடிக்கும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிசம்பரில் தொடங்கும் தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி திரைப்படம்!

கவின் –ஆண்ட்ரியாவின் ‘மாஸ்க்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான விவரம்!

அடுத்த படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசுகிறாரா ஜேசன் சஞ்சய்?

விஜய்க்கு சொன்ன கதையைதான் ரஜினிக்காக பட்டி டிங்கரிங் பார்க்கிறாரா ஆர் ஜே பாலாஜி?

வாட்ஸ் ஆப்பில் மோசடி… செல்ஃபோன் எண்ணைப் பகிர்ந்த உஷாராக்கிய ஸ்ரேயா!

அடுத்த கட்டுரையில்
Show comments