இளையராஜாவும் ரஹ்மானும் கலந்த கலவை அனிருத்… ரஜினிகாந்த் பாராட்டு!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (08:52 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது. அதன் ஒளிபரப்பு நேற்று சன் தொலைக்காட்சியில் நடந்தது. அப்போது இசையமைப்பாளர் அனிருத்தைப் பாராட்டி பேசிய ரஜினிகாந்த் “அனிருத் இளையராஜா மற்றும் ரஹ்மான் ஆகியோர் சேர்ந்த கலவை” எனப் புகழ்ந்து பேசினார். இது இளையராஜா மற்றும் ரஹ்மான் ரசிகர்கள் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments