Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருவழியாக வெளியாகிறது ஜெய்யின் புகழ்

ஒருவழியாக வெளியாகிறது ஜெய்யின் புகழ்
, வியாழன், 26 நவம்பர் 2015 (14:37 IST)
வருண் மணியன் தயாரிப்பில், உதயம் மணிமாறன் இயக்கத்தில் ஜெய் நடித்த படம், புகழ். இந்தப் படத்தில் ஜெய் ஜோடியாக த்ரிஷாவை நடிக்க கேட்டதாகவும், அவர் மறுத்ததால்தான் வருண் மணியன் - த்ரிஷா திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது என கிசுகிசு எழுத்தாளர்கள் எழுதி குவித்தது நினைவிருக்கலாம்.


 
 
ஜெய் நடித்த ஆக்ஷன் படம் வல்லவன் நாலு காட்சிகள் கூட சேர்ந்து ஓடவில்லை. அதற்குள் படத்தை தூக்கினார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். வல்லவன் ரிசல்ட் புகழ் படத்தை கடுமையாக பாதித்தது. காரணம், வல்லவனைப் போல புகழும் ஆக்ஷன் படம்.
 
சுரபி நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ஒருவழியாக முடிந்து சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் க்ளீன் யு சான்றிதழ் அளித்துள்ளனர். டிசம்பர், ஜனவரி நெருக்கடிக்கு நடுவில் புகழ் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil