ஜெய் பீம் படத்துக்கு முதலில் வைத்திருந்த பெயர் இதுதானாம்… வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (09:51 IST)
நடிகர் சூர்யா, மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியவர்கள் நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு முன்பாக பா.ரஞ்சித்திடம் இருந்ததாகவும், சூர்யா கேட்டதும் அதை அவர் தாராளமாக தந்ததாகவும் சூர்யா கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ஜெய்பீம் படத்துக்கு அதற்கு முன்பாக வைத்திருந்த தலைப்பு என்ன என்பது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் வசனப் பங்களிப்பில் பணியாற்றிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன் தன்னுடைய சமூகவலைதளப் பதிவொன்றில் படத்துக்கு முதலில் எலி வேட்டை எனப் பெயர் வைத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments