இயக்குனர் ஆகும் முனைப்பில் குட்னைட் மணிகண்டன் – ஹீரோவாக விஜய்சேதுபதி?

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (07:26 IST)
காதலும் கடந்து போகும், காலா மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். பன்முகத்திறமை கொண்டவரான இவர், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். மணிகண்டன் பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரன்னரானார். இந்நிலையில் இப்போது குட்னைட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.

இந்த வெற்றியால் இப்போது அவருக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இதனால் பல புதுமுக இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்ல செல்வதாகவும், ஆனால் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அவரின் கால்ஷீட் டைரி நிரம்பி விட்டதாகவும் சொல்லி அனுப்பி விடுகிறாராம். படங்களில் நடித்துக்கொண்டே விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முனைப்பிலும் உள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

முதல் கட்டப் படப்பிடிப்பை முடிக்கும் கார்த்தியின் ‘மார்ஷல்’ படக்குழு!

பாகுபலி படத்தில் முதலில் ஹ்ருத்திக் ரோஷன்தான் நடிக்க இருந்தாரா?... தயாரிப்பாளர் கொடுத்த பதில்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸான ‘வார் 2’ திரைப்படம்!

ஐடி ஊழியரைத் தாக்கிய விவகாரம்… லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்!

அடுத்த கட்டுரையில்
Show comments