ஜகமே தந்திரம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பாளரிடம் பேசிய தனுஷ்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:06 IST)
ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அதன் வெளியீடு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆனால் இதில் படத்தின் கதாநாயகன் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருக்கு சம்மதம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளரோடு கருத்து மோதலில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டும் பார்க்கும் படம் என்ற வகையில் வைத்துள்ளதாம் நெட்பிளிக்ஸ். ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் சுமார் 157 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

ஆனால் நெட்பிளிக்ஸுக்கு விற்ற பின்னரும் அந்த படத்தின் ரிலிஸ் எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில் இப்போது ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் தனுஷே தயாரிப்பாளரிடம் கர்ணன் படத்தின் ரிலீஸ் பாதிக்காமல் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதால் தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments