Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் பிறந்தநாளில் வெயிட்டாக வந்திறங்கிய "ஜகமே தந்திரம்" ரகிட ரகிட சிங்கிள் ட்ராக்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (09:25 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட ரகிட’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் இன்று தனுஷ் பிறந்த நாள் பரிசாக சற்றுமுன் வெளியாகியுள்ளது. "எனக்கு ராஜா"வா நான்  வாழுறன்... எதுவும் இல்லனாலும் ஆளுறன்" என்ற பாடல் வரிகள் சும்மா அல்லுவுடுது... இதோ வீடியோ.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments