Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர் + OTT: ஒரே நாளில் ஜகமே தந்திரம் !!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (13:19 IST)
ஜகமே தந்திரம் ஒரே நாளில் திரையரங்குகளிலும், OTT-யிலும் வெளியாகும் என தெரிகிறது.

 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
 
தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகியும் ரிலீஸாகாமல் இருந்தது. 
 
அதற்குக் காரணம் படத்தை எப்படியாவது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டுமென படக்குழு நினைத்ததே என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படக்குழுவினர் படத்தை நெட்பிளிக்ஸில் டிஜிட்டர் ரைட்ஸ் மொத்தத்தையும் 45 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
ஆனால் தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு தனுஷுக்கு விருப்பமில்லை என்றும் அதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இது போன்ற கருத்து மோதல்களை தவிர்க்க தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஒரே நாளில் திரையரங்குகளிலும், OTT-யிலும் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments