Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாக்கிசானின் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?

ஜாக்கிசானின் ஆசை : நிறைவேற்றுவாரா ரஜினி?

ஜாக்கிசானின் ஆசையை  நிறைவேற்றுவாரா ரஜினி?
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (11:34 IST)
விரைவில் தமிழில் வெளியாக உள்ள தனது படத்தை நடிகர் ரஜினிகாந்த் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ஆசிய சூப்பர்ஸ்டார் நடிகர் ஜாக்கிசான் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை தனது அதிரடி சண்டை மற்றும் நகைச்சுவை காட்சிகள் மூலம் கவர்ந்தவர் ஜாக்கிசான். இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம்  ‘ஸ்கிப் டிராஸ்’. 
 
இந்த படம் சீனாவில் ஆயிரம் கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. ரஜினி நடித்த கபாலி படமும், இந்த படமும் சீனாவில் ஒரு சமயத்தில் வெளியானது. அப்போது கபாலி படத்தை ஜாக்கிசான் திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்துள்ளார்.
 
ஸ்கிப் டிராஸ் படத்தின் தமிழ் பதிப்பு ‘இரு கில்லாடிகள்’ என்ற பெயரில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. தான் கபாலியை பார்த்தமாதிரி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஜாக்கிசான்.
 
ஆசிய சூப்பர்ஸ்டாரின் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ், அமலா பால் இடையில் புகுந்த ரஜினியின் மாஸ்டர் பிளான்