Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவான் பட முதல் சிங்கில் #VandhaEdam ரீலீஸ்...'' ''வாங்க, ஆட்டம் போட நேரம் வந்தாச்சு!''- ஷாருக்கான் டுவீட்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (13:16 IST)
ஷாருக்கான்-அட்லீ இணைந்து உருவாக்கியுள்ள ஜவான் பட முதல் சிங்கில் #VandhaEdam  ரிலீஸாகியுள்ளது.
 
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில்  இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படத்தில் நயந்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத்.

பாலிவுட்டிற்கு நுழையும் அனிருத்தின் முதல் படம் ஜவான் படம். இதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது.

இந்த நிலையில் இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் தன் டுவிட்டர் பக்கத்தில் ஜவான் பாடலை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

வந்த இடம் என் காடு,  நீதான்  பலியாடு என்ற  பாடல் துள்ளல் இசையில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையிலுள்ளது. இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். ஷாருக்கான் அசத்தல் நடனம் ஆடியுள்ளார். ஜவான் பட முதல் பாடலே ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் இப்படத்தின் மற்ற பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

இதனால் இன்னும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன் இசையில் பூர்த்தி செய்துள்ளார் அனிருத். இப்பாடல் 'டி சீரீஸ்-தமிழ் யூடியூப்' பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments