நான் ஜெயலலிதா ஃப்ரெண்டு: நடிகை ஊர்வசியின் ‘J.பேபி’ ட்ரெய்லர் ரிலீஸ்..!

Mahendran
புதன், 28 பிப்ரவரி 2024 (19:38 IST)
நடிகை ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடித்த ‘J.பேபி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் தினேஷ் அம்மா மகனாக நடித்திருக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித்  தயாரித்து உள்ளார் என்பதும் இந்த படத்தை சுரேஷ் மாரிய என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சின்ன சின்ன கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் ஊர்வசி மீது ஒரு கட்டத்தில் வெறுப்பாகும் மகன் தினேஷ் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் இதனை அடுத்து அவர் என்ன ஆனார்? அவருடைய குழந்தைத்தனமான சேட்டைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்த காமெடியுடன் கூடிய கதையம்சம் தான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது 
 
குறிப்பாக நான் இந்திரா காந்தியின் பிரண்டு, ஜெயலலிதாவின் பிரண்டு என பேசுவதும் போலீஸ்காரரிடம் இளக்காரமாக பேசுவதுமான காட்சிகள் பார்க்கும்போது இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments