Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூ ஜெனரேஷன் காமெடிப் படம், இவனுக்கு தண்ணில கண்டம்

நியூ ஜெனரேஷன் காமெடிப் படம், இவனுக்கு தண்ணில கண்டம்
, செவ்வாய், 7 அக்டோபர் 2014 (10:17 IST)
காமெடிப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நியூ ஜெனரேஷன் படம்தான், இவனுக்கு தண்ணில கண்டம்.
 
அது என்ன நியூ ஜெனரேஷன்...?
 
வேறொன்றுமில்லை. இன்றைய மாடர்ன் இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் இந்த அடைமொழி.
 
படத்தின் நாயகன் - கதைப்படி ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர். அதனால் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் தீபக்கையே நாயகனாக நடிக்க வைத்துள்ளார், படத்தை இயக்கியிருக்கும் சக்திவேல். இவரது சின்னத்திரை பாசத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. சின்னத்திரையில் பிரபலமான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரை இயக்கிய சக்திவேல்தான் இவர்.
 
தொடக்கவிழா, போஸ்டர் என்றெல்லாம் கரன்சியை கரியாக்காமல் நேராக படப்பிடிப்புக்கு கிளம்பி, படத்தை முடித்து, தற்போது டப்பிங் பேசுகிற அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil