ஜஸ்ட் இன்.. யார் அந்த அதீரா? கே.ஜி.எஃப் டீம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (12:23 IST)
யார் அந்த அதீரா என்ற கேள்விக்கு கே.ஜி.எஃப் படக்குழு இன்று பதிலளித்துள்ளது. 
 
எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிது எதிர்பார்க்கப்படும் படமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 
இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில் இன்று அதீரா யார் என்பது பற்றி தகவலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. ஆம், யூகங்கள் உண்மையாகியுள்ளன, அதாவது அதீரா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த இரண்டாம் பாகத்தில் அதீரா கதாப்பாத்திரம்தான் முக்கிய வில்லனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. சஞ்சய் தத் பிறந்தநாளான இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments