Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடம் பொருள் ஏவல் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2015 (20:57 IST)
சீனு ராமசாமி இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் படம், இடம் பொருள் ஏவல். படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் திரைக்கு வராமல் உள்ளது. விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பிரபலங்கள் நிறைந்திருந்தும் படம் விலை போகவில்லை என்கிறார்கள்.
 
இந்நிலையில், வெள்ளக்காரதுரை படத்தை தயாரித்த கோபுரம் ஃபிலிம்ஸ் அன்பு செழியன் இடம் பொருள் ஏவலை தமிழகம் முழுவதும் திரையிட முன்வந்துள்ளார். அவர் ஒரு நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
 
படத்தின் கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. 
 
அதனை ஏற்றுக் கொண்ட திருப்பதி பிரதர்ஸ், விஷயத்தை சீனு ராமசாமியிடம் சொல்ல, அவரும் அதற்கு உடன்பட்டிருக்கிறார். விரைவில் கிளைமாக்ஸ் காட்சி மாற்றி எடுக்கப்படும் என தெரிகிறது.

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments