Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படித்தான் உருவானது காற்று வெளியிடை பாடல்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (13:17 IST)
மணிரத்னம் படத்தின் தகவல்களை அவர் வெளியிட மாட்டார். அவரது படங்களுக்கு பாடல் எழுதும் வைரமுத்து அவ்வப்போது மணிரத்னம் படங்கள் குறித்த செய்தியை வெளியிடுவார். காற்று வெளியிடை படம் குறித்த முதல் அதிகாரப்பூர்வ செய்தி வைரமுத்துவிடமிருந்துதான் வந்துள்ளது.


 
 
காற்று வெளியிடை படத்தில் இடம்பெறும் பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
 
"காற்று வெளியிடை படத்தின் ஐந்தாம் பாடல் நேற்று நிறைவுற்றது. மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் என்ற கனிந்த கலைஞர்களோடு தொழிற்படுவது ஒரு தனி சுகம்.
 
நேற்று மாலை 4 மணிக்குக் கூடினோம்;
6 மணிக்கு மெட்டு இறுதியானது,
8 மணிக்குப் பாட்டு உறுதியானது,
இரவு 12 மணிக்கு ஒலிப்பதிவு நிறைந்தது.
 
என்ன லயம், என்ன நயம்.
 
பிரிவின் வலி சொல்லும் நினைவின் பாடல் அது. ஒரு வரி சொல்லட்டுமா?
 
அன்பே நான் அலைபோல
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
உன்பேரைக் கூவுகிறேன்..."
 
- இவ்வாறு ட்விட்டரில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments