Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட, அது குஷி 2 இல்ல, அஜித் படம்....

அட, அது குஷி 2 இல்ல, அஜித் படம்....

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (11:54 IST)
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அப்படம் குஷி படத்தின் இரண்டாம் பாகம் என்றே அனைவரும் கருதினர்.


 
 
தமிழில் விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற குஷியை எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகாவை வைத்து இயக்கினார். படம் அங்கும் சூப்பர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா மீண்டும் பவன் கல்யாணை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.
 
எஸ்.ஜே.சூர்யா குஷி இரண்டாம் பாகத்தை விஜய்யை வைத்து இயக்க முயன்று, விஜய்யின் கால்ஷீட் கிடைக்காததால் அக்கதையை பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் இயக்குகிறார் என கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என இப்போது தெரிய வந்துள்ளது.
 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தையே தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்குகிறாராம். தெலுங்குக்கும், பவன் கல்யாணின் இமேஜுக்கும் ஏற்ப சில மாறுதல்களுடன் வீரம் தெலுங்கு ரீமேக் தயாராகி வருகிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’.. டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்: இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு!

'மெய்யழகன்’ படத்தின் நீளம் குறைப்பா? நெகட்டிவ் விமர்சனத்தால் அதிரடி முடிவு..!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. ட்விட்டரில் வாழ்த்தாத ரஜினிகாந்த்..!

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments