Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜமா’ படத்தின் மதிப்பை தன் இசை மூலம் இசைஞானி இளையராஜா உயர்த்தியுள்ளார்- இயக்குநர் பாரி இளவழகன்!

J.Durai
திங்கள், 29 ஜூலை 2024 (14:28 IST)
நோக்கம் தூய்மையாகவும் தெளிவாகவும் இருக்கும்போது ஒரு இயக்குநர் சினிமா ரசிகர்களின் இதயங்களை வெல்வார். அத்தகைய வலுவான கதைக்களத்தைக் கொண்ட படங்கள் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். அப்படியான படமாக பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘ஜமா’ திரைப்படம் அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று திரைக்கு வரவிருக்கிறது. 
 
இது குறித்து இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன் கூறும்போது......
 
“’ஜமா' படத்தின் ஸ்கிரிப்டை எழுத முடிவு செய்தபோது, பார்வையாளர்களுக்கு திரையில் புதுவித அனுபவத்தை கொடுக்க விரும்பினேன். 
 
அங்கு அவர்கள் இதுவரை கண்டிராத உலகத்தை பார்ப்பார்கள். அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் பொருளையும் புகழையும் பொருட்படுத்தாது அவர்களது மகிழ்ச்சி, உணர்ச்சிகள், வலிகள் என அர்ப்பணிப்போடு இருக்கும் வாழ்க்கையைக் காட்ட விரும்பினேன். நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் இது போன்ற பல தெருக்கூத்து கலைஞர்களின் எதிரொலி அல்ல, அவர்களை நாம் புரிந்து கொள்வதற்கான வழி இது. நான் படத்தைப் பற்றி மேலும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், திரையரங்குகளில் இருந்து வெளியேறும் போது ’ஜமா’வின் உணர்ச்சிகரமான அனுபவங்களை பார்வையாளர்கள் வீட்டிற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தின் உணர்ச்சிகளையும் மதிப்பையும் உயர்த்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார். 
 
’ஜமா’வில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் உள்ளனர். 
 
இப்படத்தை பரி இளவழகன் இயக்கி இருக்கிறார் மற்றும் முன்பு ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் ஆகஸ்ட் 2, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments