Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், நியூஸ் சேனலை வாங்குகிறாரா ? வெளியாகும் தகவல்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (14:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.
 

இப்படத்தை அடுத்து, விஜய்68 படத்தின் டெஸ்ட் ஸூட்டிற்காக நடிகர் விஜய், வெங்கட்பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சினிமாவில்  நடிப்பதுடன்  மக்கள் சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி, சமீபத்தில், கல்வி விழா நடத்தினார். அதன்பின்னர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இலவச கல்வி பயிலகம் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதையடுத்து, இலவச சட்ட ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில்,  சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தின், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 1000 பேர் பங்கேற்றனர்.

அதில் அனைத்து தொகுதிகளிலும் செயலாளர்கள் இணை செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 30 அயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க விஜய் மக்கள்  இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஜய் பிரபல நியூஸ் சேனல் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நிகழ்ச்சியில் அவரது மக்கள் இயக்க யூடியூப் சேனலில் தான் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கிராமங்களுக்கும் இது சென்று சேர விஜய்   நியூஸ் சேனல் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் வரும் தேர்தலுக்கு முன்னதாக இந்த சேனல் செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments