Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகன் படத்தில் இந்த வேடத்தில்தான் நடிக்கிறாரா விஜய்?.. இணையத்தில் பரவும் தகவல்!

vinoth
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (09:32 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். இப்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து வருவதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. மே மாதம் 15 ஆம் தேதியோடு மொத்த படமும் நிறைவடையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

தெலுங்கு இயக்குனரோடுக் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷனில் கலக்கிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

அடுத்த கட்டுரையில்
Show comments