Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிப் ஹாப் ஆதியின் வீரன் மின்னல் முரளி படத்தின் காப்பியா?.. இயக்குனருக்கே போன் போட்ட படக்குழு!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (08:25 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் நடிப்பில் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து தற்போது அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்த படம் ஜூன் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலரை வைத்து இது மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன மின்னல் முரளி படத்தின் காப்பி போல இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இப்போது படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் சரவண் ஆகியோர் இணைந்து மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பசில் ஜோசப்புக்கே போன் போட்டு இது குறித்து ஜாலியாக உரையாடியுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments