Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்காக எழுதிய கதையில் சிம்பு நடிக்கிறாரா… STR 48 பற்றி பரவும் தகவல்கள்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (10:06 IST)
துல்கர் சல்மான், ரக்ஷன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.

இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. ரஜினி, அடுத்தடுத்து வேறு வேறு இயக்குனர்களோடு படம் பண்ணிவருகிறார். இந்நிலையில் ரஜினிக்காக தான் எழுதிய கதையைதான் இப்போது சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments