காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதிஹாசன்… புகைப்படங்களை நீக்கி ரசிகர்களுக்கு ஷாக்!

vinoth
சனி, 27 ஏப்ரல் 2024 (07:17 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்தார். 

ஸ்ருதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப்படம் லாபம். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து தற்போது அவர் ‘யாமிருக்க பயமே’ மற்றும் கவலை வேண்டாம் படத்தின் இயக்குனர் DK இயக்கத்தில் உருவாகும் ஒரு த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜோடு இணைந்து இனிமேல் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டார்.

ஸ்ருதிஹாசன் டூடுல் கலைஞரான சந்தீப் என்பவருடன் லிவ் இன் உறவில் இருந்தார். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் ரொமாண்டிக்கான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் இப்போது திடீரென அவரை சமூகவலைதளங்களில் இருந்து பின்தொடர்வதை நிறுத்திவிட்டு அவரோடு சேர்ந்திருக்கும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments