Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிடப்படுகிறதா ராமதாஸ் பயோபிக் திரைப்படம்..?

vinoth
புதன், 31 ஜூலை 2024 (09:46 IST)
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸின் வாழக்கை வரலாற்றுப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தில் ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிப்பார் என்றும், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் அதன் பிறகு அடுத்தகட்டத்துக்கு எதுவும் நகரவில்லை. இதையடுத்து படத்தில் இருந்து சரத்குமார் வெளியேறிவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது படமே கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments