விஜய்யின் கடைசி படத்தை இயக்குகிறாரா ஆர் ஜே பாலாஜி?

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், நேற்று தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின்னர் தனது 69 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான் இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. இந்த பட்டியலில் கார்த்திக் சுப்பராஜ், ஹெச் வினோத், ஷங்கர் மற்றும் த்ரி விக்ரம் என பலரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இப்போது லேட்டஸ்ட்டாக இந்த பட்டியலில் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!...

நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது: விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பிரஜின்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அடுத்த கட்டுரையில்
Show comments