ரஜினியின் அடுத்த பட இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த பிரதீப் ரங்கநாதன்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (10:11 IST)
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இதையடுத்து அவர் தனது அடுத்த படத்தில் ரஜினியை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் லண்டன் சென்று லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரனை சந்திக்க முயற்சி செய்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது.

முன்னதாக ரஜினி சிபி சக்ரவர்த்தியிடம் கதை கேட்டதாகவும், ஆனால் அந்த கதையில் திருப்தி இல்லாததால் பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அரசன்’ படம் எப்படி வரப்போகுது தெரியுமா? புது அப்டேட் கொடுத்த கவின்

திரை தீப்பிடிக்கப் போகுது… ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் ஆக்‌ஷன் விருந்து!

விஜய் சேதுபதி படம் தாமதம்… ஹரிஷ் கல்யாணை இயக்கும் பாண்டிராஜ்!

150 கோடி ரூபாய் மைல்கல் வசூலைத் தொட்ட ராஷ்மிகாவின் ‘தாமா’!

அடுத்த கட்டுரையில்
Show comments