மாநாடு டைம் லூப் படமா? கசிந்த தகவல்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:57 IST)
மாநாடு படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இவ்விரு படங்களுக்குமே திரையரங்கங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது புதிதாக மாநாடு திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தனியாக அதிக திரைகளில் ரிலீஸானால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில் இப்போது ரஜினி மற்றும் அஜித் படங்களோடு மோதும் ரிஸ்க்கை எடுப்பது ஏன் என்று சிம்பு ரசிகர்களே குழம்பியுள்ளனர். அதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளதாம். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதால் அதற்குள் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனால்தான் சிம்புவின் மாநாடு தீரைப்படம் தீபாவளிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் மாநாடு படம் அரசியல் படம் என்று யூகங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது டைம் டிராவல் கதையின் ஒரு வகையான டைம் லூப் என்ற வகையில் உருவாகியுள்ளதாக யாரோ தகவலை வெளியிட்டு விடவே இதுபற்றி ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

உருவாகிறது பிரம்மாண்டக் கூட்டணி… ராஜமௌலியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அல்லு அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments