Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் & அனிருத் ஹீரோக்களாக நடிக்க இருந்த படம் ட்ராப்பா?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (07:46 IST)
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். பல முன்னணி நடிகர்களின் ஆக்‌ஷன் படங்களுக்கு அவர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை.

இந்நிலையில் தங்கள் நெருங்கிய நண்பர்களான லோகேஷ் மற்றும் அனிருத் ஆகியோரை ஹீரோக்களாக வைத்து ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்கும் திட்டத்தை தொடங்கினார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. படக் கலைஞர்கள் அனைவருமே தங்கள் துறைகளில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு இந்த படம் வேண்டாம் என முடிவு செய்திருக்கலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!

ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments