Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ திரைப்படம் LCU- வில் இணையுமா? தயாரிப்பாளர் சொன்ன தகவல்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (11:38 IST)
நேற்று வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்‌ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நிலையில் இந்த டிரைலரில் விஜய் ஒரு இடத்தில் ஆவேசமாக ஒரு மோசமான கெட்டவார்த்தையை பேசும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் குழந்தைகளை ரசிகர்களாகக் கொண்டுள்ள விஜய் தன் படத்தில் டிரைலரில் இப்படி பேசி இருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. ஆனாலும் டிரைலர் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் தயாரிப்பாளர் லியோ படம் LCU வில் இணையுமா என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “அதை நாங்கள் ரகசியமாக வைத்துள்ளோம். படம் ரிலீஸ் ஆன பின்னர் ரசிகர்கள் அதைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments