சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா கவின்?

vinoth
புதன், 5 ஜூன் 2024 (16:57 IST)
சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பின்னர் அவரை வைத்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பொன்ராம் இயக்கிய சமீபத்தை படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. இதனால் அவர் இப்போது தன்னை நிரூபிக்க ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் தன்னுடைய சூப்பர் ஹிட் படமான வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கவினை நடிக்க வைக்க அவர் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பொன்ராம் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 தொடங்கலாம் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments