Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது அதுல்ல? ஒரே மாதிரியா இரண்டு படமா? குழப்பத்தில் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (18:23 IST)
சசிக்குமார் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் “கென்னடி கிளப்” திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லர் விஜய் நடிக்கும் “பிகில்” படத்தின் கதைக்கருவை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் “கென்னடி கிளப்”. பெண்கள் கபடியை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

பாரதிராஜா மிகப்பெரிய கபாடி சாம்பியன். கிராமத்து பெண்களை மிகப்பெரிய கபாடி வீரர்களாக மாற்ற துடிக்கிறார் பாரதிராஜா. அந்த பெண்களுக்கு கோச்சாக இருந்து பயிற்சி கொடுக்கிறார் ஒரு காலத்தில் பாரதிராஜாவிடம் பயிற்சி பெற்ற கபாடி வீரரான சசிக்குமார். அந்த பெண்கள் குழு கபாடி சாம்பியன் பட்டத்தை பெற போராடுவது விறுவிறுபான கதை என ட்ரெய்லரை பார்த்து சிறியளவில் அனுமானிக்க முடிகிறது.

நிறைய ரசிகர்கள் இந்த ட்ரெய்லர் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பிகில்’ திரைப்படமும் பெண்கள் கால்பந்து அணியை பற்றிய படமாக வெளிவர இருக்கிறது. அதையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு படத்தின் கதையும் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி இருப்பதால் கதையும் ஒன்றுபோலவே இருக்குமோ என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்மதிப்பு உண்டு. ஒரே கதைக்கருவில் இருந்தாலும் சுசீந்திரனின் கதைசொல்லும் விதம் வேறு. அதனால் இரு படங்களும் இருவேறு விதமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கென்னடி கிளப் திரைப்படத்தின் ட்ரெய்லரை இங்கே காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments