கோட் படத்தில் அஜித் இருக்காரா?... எதிர்பார்ப்பை எகிற வைத்த வெங்கட் பிரபு!

vinoth
சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:56 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரும் இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளர். அதில் “படத்தில் ஒரு உச்சகட்டமான தருணம் உள்ளது. அப்போது அஜித்தின் குரல் வருமா? அல்லது அஜித் சம்மந்தப்பட்ட என்ன வரும் என்பதை இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடியாது” எனக் கூறி அஜித் ரசிகர்களை படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments