முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை பூர்ணா. சின்ன அசின் என்று விஜய்யால் பாராட்டப்பட்டவர். பூர்ணாவின் திறமையை இதுவரை யாரும் முழுமையாகப் பயன்படுத்தியதில்லை என்று வித்தகன் படத்தின் போது பார்த்திபனால் புகழப்பட்டவர்.
புகழப்பட்ட அளவுக்கு பூர்ணாவின் திரைவாழ்க்கை புத்துணர்ச்சியாக இல்லை. மலையாளத்தில் ஓரளவு பரவாயில்லை. அமலா பால் நடிக்கும் மிலியிலும் பூர்ணா இருக்கிறார்.
இந்நிலையில் பூர்ணாவுக்கும் தெலுங்கு ஒளிப்பதிவாளர் பரணிக்கும் காதல் என்று ஒரே புரணி. பூர்ணாவின் கால்ஷீட்டை பரணிதான் கவனிக்கிறார், சென்னை வந்தால் இருவரும் ஒரே ஹோட்டலில் ஒரே அறையில் தங்குகின்றனர் என்று அடுக்கடுக்காக ஸ்பை செய்திகள் இந்த ஜோடியைச் சுற்றி.