ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடிக்கிறாரா அமீர்கான்?

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (07:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம்  ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் சமீபத்தில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணைந்தார். இவர் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் ‘கூலி’ திரைப்படத்தில் அமீர்கான் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பாலிவுட் சென்று அமீர்கானை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments