2.0 நஷ்டம்: ரூ.556 கோடி வசூலித்து என்ன லாபம்?

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (16:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகி நேற்றுடன் 8 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த எட்டு நாட்களில் படம் எவ்வளவு வசூலித்தது என்ற தகவல் கிடைத்துள்ளது. 
 
அதாவது, இந்த படம் நேற்றைய கலெக்‌ஷன் வரை ரூ.556 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் ரூ.125 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.75 கோடியும், கேரள, கர்நாடக மாநிலங்களில் ரூ.46 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.175 கோடியும், வெளிநாடுகளில் ரூ.135 கோடியும் வசூல் செய்துள்ளது என கணக்கீடுகளும் வெளியாகியுள்ளது.
 
என்னத்தான் ரூ.556 கோடி வசூலித்தாலும், எட்டு நாட்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றாலும், இந்திய அளவில் அதிக வசூல் செய்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்தாலும் போட்ட பணத்தை திருப்பி எடுக்க வேண்டும் அல்லவா. அப்படி பார்த்தால் ரூ.600 கோடி போட்டு படம் எடுத்து இன்னும் அந்த பணத்தையே வசூல் செய்யவில்லை. 
2.0 டெக்னிக்கலா உலகத்துக்கே பாடம் சொல்லி கொடுத்திருந்தாலும், வசூலில் கோட்டைவிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் படத்தின் வசூல் அதிகரித்தே ஆக வேண்டும் அப்போதுதான் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும். 
 
மேலும் இந்த படம் விரைவில் சீன மொழியில் சுமார் 50,000 ஸ்கீரின்களில் வெளியாகவுள்ளதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments