Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமான நிலையத்தில் நயன்தாராவை விசாரித்த அதிகாரிகள் : பின்னனி என்ன?

விமான நிலையத்தில் நயன்தாராவை விசாரித்த அதிகாரிகள் : பின்னனி என்ன?
, வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (19:02 IST)
மலேசிய விமான நிலையத்தில், நயன்தாராவை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை செய்த விவகாரத்திற்கு அந்த படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.


 

 
நடிகை நயன்தாரா இருமுகன் என்ற படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றார். படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவர் இந்தியா திரும்பும் போது, விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாகியது.
 
அதுபற்றி இருமுகன் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில் “மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் வழியாக செல்வார்கள். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது. அதில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். 
 
அதன்பின், நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இன்றி இந்தியா திரும்பினர்” என்று கூறியுள்ளனர்.
 
மேலும், நயன்தாராவின் பாஸ்போட் நகல் அந்நாட்டு இணையதளங்களில் வெளியானது குறித்து, மலேஷிய காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil