Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தாவின் துணிச்சலான நடிப்புக்கு சர்வதேச ஊடகம் பாராட்டு!

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (16:03 IST)
ஏராளமான திரை நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் சமந்தாவின் நடிப்பை குறித்து சர்வதேச ஊடகம் பாராட்டு தெரிவித்துள்ளது. 
 

 
தேசிய விருது பெற்ற “ஆரண்ய காண்டம்” படத்தின் இயக்குனர்  தியாகராஜன் குமாரராஜா 8 ஆண்டுகளுக்கு பின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை இயக்கி இன்று வெளிவந்துள்ளது. இதில் மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 
 
சூப்பர் டீலக்ஸ் படம் முன்கூட்டியே பத்திரிக்கையாளர்களுக்கான ப்ரீவியூ காட்சி வெளியிடப்பட்டதால் பெரும்பாலான இணையதளங்களில் இந்த படத்தின் விமர்சனம் நேற்றே வந்துவிட்டது. படத்தை பார்த்தவர்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தை தெரிவித்து வரும் வேளையில் தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பிரபல பத்திரிக்கை நிறுவனமான "நியூ யார்க் டைம்ஸ்" வெளியிட்டுள்ளது.
 
அதில் , படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராட்டியதோடு , சமந்தாவின் நடிப்பையும் அவரது கேரக்டரையும் வெகுவாக பாராட்டியுள்ளது நியூ யார்க் டைம்ஸ்.  விஜய்சேதுபதி, பகத் பாசில் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில்  அற்புதமாக நடித்திருந்தபோதிலும் சமந்தாவின் கேரக்டரையும்  அவரது  துணிச்சலான நடிப்பையும்  புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments