Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேஷ்மிக்கு குவியும் வாய்ப்புகள்

ரேஷ்மிக்கு குவியும் வாய்ப்புகள்
, வியாழன், 5 மார்ச் 2015 (11:31 IST)
இனிது இனிது படத்தில் அறிமுகமான ரேஷ்மி, தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடிப்பார் என அனைவரும் நம்பினர். ஆனால், அதன் பிறகு சரியான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை. ஆனாலும் காலம் அவரை கைவிடவில்லை.
கடைசியாக பர்மா படத்தில் நடித்தவர் தற்போது முக்கியமான இரு படங்களில் நடித்து வருகிறார்.
 
நட்பையும், காதலையும் சொல்லும் நட்பதிகாரம் படத்தில் ரேஷ்மி ஹீரோயின். அதேபோல் சிம்ஹா ஹீரோவாகியிருக்கும் உறுமீனிலும் இவர்தான் நாயகி. சைக்கலாஜிகல் த்ரில்லரான உறுமீனில் ரேஷ்மி ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவராக வருகிறார்.
 
இந்தப் படங்கள் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்றார் ரேஷ்மி. கூடவே நல்ல வாய்ப்புகளையும் பெற்றுத் தரட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil