Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!

vinoth
சனி, 6 ஏப்ரல் 2024 (07:43 IST)
ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் மற்றும் மியார் ஜார்ஜ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் இன்று நேற்று நாளை. தமிழில் அதிகம் வராத டைம் டிராவல் வகையில் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த படத்தின் பார்ட் 2 எடுக்க விரும்பிய தயாரிப்பாளர் சி வி குமார் இயக்குனர் ரவிக்குமாரை கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள சொன்னார். அவரின் இணை இயக்குனர் எஸ் பி கார்த்திக் அந்த படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு பூஜையும் போடப்பட்டது.

ஆனால் படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது இக்லூ படத்தை இயக்கிய பரத் மோகன் இயக்கத்தில் இன்று நேற்று நாளை 2 படத்தினை தொடங்கியுள்ளார் தயாரிப்பாளர் சி வி குமார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இதே போல பீட்சா படத்தின் நான்காம் பாகத்தையும் தொடங்கியுள்ளார்.  இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த பஞ்சாப் நீதிமன்றம்!

சாய் பல்லவி இயக்குனர் ஆனதும் எனக்கொரு வேடம் கொடுப்பதாக சொல்லியுள்ளார்- பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

ஒப்பந்தம் ஆகி வெளிவராத படங்களே 22… இமான் பகிர்ந்த தகவல்!

குடும்பஸ்தன் படத்தில் அந்த வேடத்தில் நடித்தது ‘மை டியர் பூதம்’ மூசாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments