Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தியன் தாத்தா ஓவியங்கள்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

vinoth
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (14:26 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகள்  5 மணிநேரத்துக்கு மேல் வந்ததால் இப்போது படத்தை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளனர். முதலில் இந்தியன் 3 படம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நாளில் இந்தியன் 3 திரைப்படம் பற்றி கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டது என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு பாடல் காட்சியை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பாடலில் கமல்ஹாசன் நடிக்கப் போவதில்லையாம். சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் பாடலை நாளை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக தற்போது திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள சில அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தியன் கெட்டப்பில் கமல்ஹாசன் இருக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments