Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் படம் ரி ரிலீஸுக்கு முன்பே பிரபல ஓடிடியில் ரிலீஸா?

vinoth
வெள்ளி, 3 மே 2024 (07:08 IST)
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியன் 2 படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தியன் முதல் பாகத்தை மே 30 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. விரைவில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகிறதாம். இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாகும் போது முதல் பாகத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments