Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினைப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Webdunia
வியாழன், 25 மே 2017 (17:20 IST)
இந்திய கிரிக்கெட் வீரரான சச்சினின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் நேற்று பார்த்து ரசித்துள்ளனர்.


 

சச்சினின் வாழ்க்கை வரலாறான ‘சச்சின் – எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்தை, ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கியுள்ளார். ஹிந்தி மற்றும் மராத்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சச்சினின் பழைய விஷுவல்ஸைப் பயன்படுத்தியிருப்பதோடு, சில காட்சிகளில் சச்சினை நடிக்கச் சொல்லியும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை இந்தப் படம் ரிலீஸாவதை முன்னிட்டு, நேற்று இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்காக சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் சச்சின். அனைத்து வீரர்களும் தங்கள் மனைவி அல்லது காதலியோடு குடும்பமாக வந்து திரைப்படத்தைப் பார்த்து ரசித்தனர். ‘இப்படியெல்லாமா சச்சின் இருந்தார்?’ என்று ஆச்சரியக் கேள்வி எழுப்பக்கூடிய பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது என்கிறார்கள்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐம்பது கோடி ரூபாய் வசூலை நெருங்கும் வெற்றிமாறனின் ‘விடுதலை 2’…!

அரசியலுக்கு வந்தால் சுதந்திரம் பறிபோய்விடும்… பிரபல நடிகர் சோனு சூட் கருத்து!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் உருவான சிக்கல்!

ஜெயிலர் 2 படத்தில் இணையும் கே ஜி எஃப் பிரபலம்!

ஜெயிலர் 2 வுக்குப் பிறகு பேன் இந்தியா நடிகரோடு இணையும் நெல்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments