Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்தியன் 2’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி.. லைகா அதிரடி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 27 மே 2024 (12:35 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

’இந்தியன் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் இந்த பாடல் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் சித்தார்த் மற்றும் ரகுல் பிரீத் சிங் இருக்கும் ஸ்டில் ஒன்றை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த பாடல் இருவருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்

3 முறை செத்து செத்து பிழைத்திருக்கின்றேன்.. ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீது கண்ணீர் வீடியோ..!

10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

எங்கள் தந்தைகளும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான் – சர்ச்சைகளுக்கு கபிலன் வைரமுத்து பதில்!

தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஸ்ட்ரைக் வர இருக்கிறதா? தயரிப்பாளர்கள் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments