Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைகாவிடம் இருந்து கைமாறுகிறதா இந்தியன் 2?... திரைமறைவில் நடக்கும் பேச்சுவார்த்தை

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (14:50 IST)
இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் பாதியிலேயே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் “விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மற்றொரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்த படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி ரெட்ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே மீதிப்படத்தை தயாரித்து தங்கள் நிறுவனத்தின் பெயரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments