கதறவிட்ட தாத்தா.. அலறிய ஆடியன்ஸ்! ரன்னிங் டைமை குறைத்த இந்தியன் 2!

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஜூலை 2024 (08:34 IST)

இந்தியன் 2 படத்திற்கு முதல் நாள் முதலே நெகட்டிவ் கமெண்ட்ஸ் அதிகம் வந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைமை படக்குழு குறைத்து திரையிட்டு வருகின்றனர்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் இரண்டு நாட்களில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

பெரும்பாலான ஆடியன்ஸ் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் இருப்பது அலுப்பை தருவதாகவும், திரைக்கதை மெதுவாக நகர்வதாகவும் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தில் சில காட்சிகளை நீக்கி படத்தின் ரன்னிங் டைமை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது படத்தில் தேவையற்ற சில காட்சிகளை நீக்கி சுமார் 20 நிமிடங்கள் வரை குறைத்து படத்தின் ரன்னிங் டைமை 2 மணி நேரம் 40 நிமிடங்களாக மாற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இனியாவது படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments